வாழ்த்தும் வாரிசுகளும்
ராகுல்காந்தி பிறந்தநாளுக்கு ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்துள்ளார். உடனே ராகுல் நன்றி தெரிவித்து idea of Indiaவைக் காப்பாற்ற திமுக புள்ளிக்கார இண்டிக்கூட்டணியில் தொடரும் என்று கூறியுள்ளார். (மறப்போம் மன்னிப்போம் வசனமெல்லாம் இல்லை. அதெல்லாம் இங்கதான் இருப்பாங்க என்று ஒரு high handed பேச்சு பேசியிருக்கிறார் ராகுல்)

இதில் 1 நடக்கும். திமுக புள்ளிக்கார இண்டிக் கூட்டணியில் இரண்டாவது பெரிய கட்சி என்ற கெத்தை விடாது. கேரளத்தில் அடித்துக்கொண்டு டில்லியில் காங்கிரஸை நாங்கள் கட்டிப் பிடிக்கவில்லையா… அப்படித்தான் எல்லாம் என்று கம்யூனிஸ்ட்கள் பேசி அழைக்கலாம். கொஞ்சம் முறுக்கிக்கொண்டு பிறகு இளகுவார்கள்.
- திமுகவுக்கு வேறு போக்கிடமில்லை. பாஜக கூட்டணியில் சேர்க்காது. சேர்த்தால் வடக்கே தேர்தல்களில் பாஜக வடக்கிருப்பதே மேல். தமிழகத்திலும் டம்மி, டில்லியிலும் குரூப்பில் ஆளாகக் கூட என்று இல்லை என்றால் கான் மார்க்கெட்டில் திரியும் தெருநாய் கூட திமுகவினரைக் கண்டால் உர் என்னும்.
- விஜய்க்கு எச்சரிக்கை. பதவியேற்பு விழாவில் ராகுலை மதிக்கவில்லை. தவிர பாஜக எதிர்ப்பில் அவ்வளவு தீவிரமாக இல்லை தவெக. அதனால் ஆதரவு, மந்திரி என்று தொடர்வோம் என்று எண்ணாதே. திமுகவோடு போனால் உன் அரசு காலி என்று விஜயை எச்சரிக்கிறார் ராகுல்.
2 நடப்பதற்கு வாய்ப்பில்லை. சில எடப்பாடி கட்சி எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்திருக்கிறார்கள். அவர்கள் விசில் சின்னத்தில் இடைதேர்தலில் போட்டியிட்டு வென்றால் விஜய் கட்சிக்கு எண்ணிக்கை கூடும். காங்கிரஸ் கம்யூனிஸ்ட் விசிக யார் போனாலும் அதிமுக திமுக என்று விஜய் கட்சிக்கு ஆட்கள் கிடைப்பார்கள். அதனால் அவர் இந்த மிரட்டலுக்கு அஞ்சவேண்டியதில்லை.