மணிமண்டபமும் மானங்கெட்ட அரசியலும் – பாகம் 2
நண்பர் பால கௌதமன் எழுதிய பதிவு. இங்கே வெளியிடுவதில் மகிழ்கிறேன்.
உலகத்தை உலுக்கிய பயங்கரவாதி ஒசாமா பின் லாடன், அமெரிக்கப் படைகளால் கொல்லப்பட்டான். அவன் உடலை விமானத்தில் எடுத்துச்சென்று நடுக்கடலில் விட்டெரிந்தனர் அமெரிக்கர்கள்! என்ன காரணம்? நிலத்தில் அடக்கம் செய்தால் அது தீவிரவாதத்தை ஊக்குவிக்கும் ஒரு நினைவுச் சின்னமாகிவிடும்! அது உலக அமைதிக்கு நிரந்தரத் தலைவலி ஆகிவிடும் என்பதால் கடலில் மீன்களுக்கு இரையாக வீசப்பட்டது ஒசாமாவின் சடலம் ! உலகம் இச்செயலை வரவேற்றது. இது தான் உலக ஒழுக்கம்.
இந்த ஒசாமாவின் உடலை மரியாதையுடன் அடக்கம் செய்ய ஒருவன் கோரினால் அவனை என்ன சொல்வோம்? அப்படித்தான் இந்த திப்புவின் மணிமண்டபக் கோரிக்கையும்!
ஏன் இந்தக் கோரிக்கை எழுந்தது? எதற்காக திண்டுக்கல்லில் மணிமண்டபம்? இதிலிருக்கும் பின்னணி என்ன? திப்பு மற்றும் ஹைதர் அலியை ஏன் முஸ்லிம்கள் முன்நிறுத்துகின்றனர்? எனபன போன்ற பல கேள்விகள் எழுகின்றன. அவற்றுக்கான விடைகளைக் காண்போம்.
2012 ஆம் ஆண்டு நவம்பர் மாதம், மத்திய மைனாரிட்டி விவகாரத்துறை அமைச்சகம், அலிகார் முஸ்லிம் பல்கலைக் கழகத்தைப் போல் நாடு முழுவதும் 5 பல்கலைக் கழகங்களை கர்நாடகா, பீகார், பெங்கால், மத்தியப் பிரதேசம் மற்றும் ஜம்மு காஷ்மிர் ஆகிய மாநிலங்களில் நிறுவ முடிவெடுத்தது. இந்தப் பல்கலைக்கழகங்கள், இந்திய அரசியலமைப்புச் சட்ட ஷரத்து 31-ன் கீழ், மைனாரிட்டி அந்தஸ்துப் பெற்று, மைனாரிட்டிக்களுக்கு 50% இடங்கள் ஒதுக்கப்படும் என்றும் அறிவித்தது. பொதுவாக, இது போன்ற அறிவிப்புகளை மைனாரிட்டி அமைப்புக்கள் வரவேற்றுப் பாராட்டு விழா நடத்துவது நம் நாட்டில் வாடிக்கையான விஷயம். ஆனால் வழக்கத்திற்கு மாறாக, 12 மார்ச் 2013 அன்று பெங்களூர் எம்.ஜி ரோடில் டி.ஜெ.ஆப்பிரகாம் என்பவர் தலைமையில் 17 கொங்கிணி கத்தோலிக்க நிறுவனங்களை சேர்ந்தவர்கள் கொங்கிணி கத்தோலிக்க கிறிஸ்தவச் சங்கம் என்ற பெயரில் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
மைனாரிட்டி அமைச்சகம் கர்நாடகத்தில், ஸ்ரீரங்கப்பட்டணத்தில் திப்பு சுல்தான் பெயரில் இந்த பல்கலைக்கழகம் நிறுவப்படும் என்று அறிவித்ததுதான் இதற்குக் காரணம். போராட்டக்காரர்கள் என்ன சொல்கிறார்கள்? ஸ்ரீரங்கப்பட்டணத்தில் இந்தப் பல்கலைக்கழகம் நிறுவப்படுவது வரவேற்கத்தக்கது. ஆனால் திப்பு சுல்தான் பெயரை அதற்கு வைப்பது, கத்தோலிக்கர்களை அவமானப்படுத்துவதற்கு ஒப்பாகும் என்று சொல்கிறார்கள்.
கத்தோலிக்கர்களுக்கு ஏன் திப்புவின் மீது இவ்வளவு கோபம்? ஆப்பிரகாம் என்ன சொல்கிறார்?
திப்பு, கர்நாடகக் கடற்கரை பகுதிகளில் வசிக்கும் 70,000 கிறிஸ்தவர்களையும், இந்துக்களையும், முஸ்லீம்களாக கட்டாய மதமாற்றம் செய்தானாம்! மானமுள்ள ஒரு சமுதாயத்தின் கோரிக்கை! அரசின் அரவணைப்பிலுள்ள ஒரு சமுதாயத்தின் கோரிக்கை இது!
அத்துடன் இந்தக் கிறிஸ்தவர்கள் நின்றுவிடவில்லை, முஸ்லிம் பெயர் தான் வைக்கவேண்டும் என்கிற அபிப்பிராயம் இருந்தால், அப்துல் கலாம் அவர்களின் பெயரைச் சூட்டுங்கள் என்று ஆலோசனையும் வழங்கினர்.
ஜிகாத் என்ற பெயரில், பல்லாயிரக்கணக்கானோரை கொன்று குவித்து, லட்சக்கணக்கானோரை மதம் மாற்றி, ஏறத்தாழ 10,000 கோயில்களை இடித்துத் தறை மட்டமாக்கி, நாட்டையே மதம் மாற்றி, இஸ்லாமிய கொடுங்கோலாட்சியை உருவாக்குவதே லட்சியமாகக் கொண்ட கொடூரனை முன்னோடியாகக் கொள்வோமே தவிர, இந்த நாட்டிற்காக உழைத்த உத்தமர் திரு.அப்துல் கலாம் அவர்களை ஏற்கமாட்டோம் என்று சொன்னால், இந்த இஸ்லாமியர்களின் நோக்கம் தான் என்ன?
கேரளம் மற்றும் கர்நாடகத்தைப் போல் தமிழகத்திலும் திப்புவும், ஹைதரும் நிகழ்த்திய அட்டூழியங்களுக்கு அளவில்லை ! தன்மானம், இன உணர்வு, சுய மரியாதை என்றெல்லாம் மேடை தோறும் முழங்கும் தமிழ் வியாபாரிகள் இந்தக் காட்டுமிராண்டிகள் செய்த அராஜகத்தை அறிவார்களா?
1755: சென்னைப் பட்டணத்தில் கலாபுக்காக பலர் வந்து விட்டதனால் அரிசி வகையறா அகப்படாமல் ஜனங்கள் மிக சிரமப்படுவதனால்………..
(தஞ்சை மராட்டிய மன்னர்கால அரசியலும் சமுதாய வாழ்க்கையும், கே.எம்.வெங்கட்டராமையா, தமிழ்ப் பல்கலைக் கழகம், தஞ்சாவூர், பக்கம் 92)
(Maratha Rule in the Carnatic, Srinivasan C.K, F.N.P 310)
(சாமி சிராங்கு மகன் இராமசாமி நாயக்கன் கடிதம் – தஞ்சை மராட்டிய மன்னர்கால அரசியலும் சமுதாய வாழ்க்கையும், கே.எம்.வெங்கட்டராமையா, தமிழ்ப் பல்கலைக் கழகம், தஞ்சாவூர், பக்கம் 91)
மனிதர்களையும், பயிர் பச்சைகளையும் கூட விட்டு வைக்காத வெறியன் கோயில்களையா விட்டு வைத்திருப்பான்? இந்தக் காட்டுமிராண்டிகள் கையில் சிக்காமல் விக்கிரகங்களை பாதுகாத்து இந்துக்கள், மராத்தியர்கள் கட்டுப்பாட்டில் இருந்த பகுதிகளில் வைத்து பூசை நடத்தினர். இதை தஞ்சை மராட்டிய ஆவணங்களிலிருந்து அறியலாம்.
காட்டுமன்னார் கோயில் ராஜகோபால சுவாமி பந்தநல்லூரில் வந்து இருப்பதால் பூசைக்காக நாள் ஒன்றுக்கு பணம் 5 வீதம் அவ்விடத்தில் இருக்கிற வரையிலும் கொடுக்கும்படி உத்திரவு.
(The coins of Tippu Sulthan by George Pitchard Taylor, P.9)
(தஞ்சை மராட்டிய மன்னர்கால அரசியலும் சமுதாய வாழ்க்கையும், கே.எம்.வெங்கட்டராமையா, தமிழ்ப் பல்கலைக் கழகம், தஞ்சாவூர், பக்கம் 93)
கி.பி. 1769: கும்பகோணத்தில் காவேரியின் கரையில் ஒரு துலுக்கர் பிள்ளையார் சதுர்த்தி தினம் கற்களை எறிந்ததனால் ஒரு பிராமணனுடைய தலை உடைந்து அபாயம் நேரும்படியாக இருந்ததனால் அவருக்கு அபராதம் 3 பணம்.
கிறிஸ்தவர்களும், முஸ்லிம்களும் படையெடுத்துச் சென்று, மதம் மாற்றி, கொள்ளையடிக்கும் நாடுகளின் வரலாற்றையும் பாரம்பரியத்தையும் அழிப்பதில் மிகவும் குறியாக இருப்பார்கள். இவர்களைப் பொருத்தவரை, உலகாதய இஸ்லாமும், கிறிஸ்தவமும் தான் அடையாளங்கள். தேசப் பற்று என்பது இவர்களுக்கு எட்டிக்காய்.. இந்த வரலாற்று அடையாள அழிப்புச் சேவையின் ஒரு பகுதி ஊர் பெயர்களை மாற்றி, மண்ணின் மாண்பையும், அதன் பாரம்பரியத்தையும் மறக்கடிக்கச் செய்வது..
ஸ்ரீரங்கபட்டணம் – பட்டண்
தார்வார் – குர்ஷீத் சவாத்
சத்தியமங்கலம் – சலாமாபாத்
குரம் கோண்டா ( கடப்பா, ஆந்திரம்) – ஜாபராபாத்
சித்தல் தூர்க் (கர்நாடகா ) – பரூக்யாப்- ஹிசாப்
கோழிக்கோடு ( கேரளம்) – பரூக்கி – தற்போது பெரோக்
இப்படி அடிப்படைவாதத்தை ஆதாரமாகக் கொண்ட இஸ்லாமிய ஆட்சி, தீரன் சின்னமலையையும், வேலு நாச்சியாரையும் மதித்து மகுடமா சூட்டப் போகிறது? முகமது கோரி, பிரித்திவிராஜ் சௌகானை தோற்கடித்தபின் ஜெயச்சந்திரனுக்கு அப்படித்தான் மகுடம் சூட்டினானா? ஆங்கிலேயர் மீதிருந்த வெறுப்பை பயன்படுத்தி இந்துக்கள் உதவியோடு ஆங்கிலேயரை விரட்டிவிட்டு, நாட்டை இஸ்லாமிய மயமாக்கத் துடித்தவன் தானே இந்தக் கயவன்? இவனைத் தேச பக்தனாகவும், வெளி நாட்டவனை இந்தியா மீது படை எடுக்க அழைப்பு விடுத்தவனை சுதந்திரப் போராட்டத்தின் விடிவெள்ளியாகவும் சித்தரித்து, இந்துக்களை ஏமாற்றி, முஸ்லிம் பயங்கரவாதத்திற்கு வளம் சேர்ப்பது தான் மதச்சார்பின்மையா?
இந்த இருவருக்கும் ஆப்கானிஸ்தானிலோ, பாகிஸ்தானிலோ, மணிமண்டபம் கட்டலாமே தவிர திண்டுக்கல்லில் அல்ல. பின் ஏன் முஸ்லிம்கள் திண்டுக்கல்லில் மணிமண்டபம் கட்ட வேண்டும் என்று துடியாய் துடிக்கிறார்கள்? அப்படி என்ன திண்டுக்கல் பாசம்?
இஸ்லாமிய அடிப்படைவாதத்தின் தலை நகர் திண்டுக்கல். திண்டுக்கல் பல நூற்றாண்டுகளாக போர்திற முக்கியத்துவம் வாய்ந்த இடமாக விளங்கியது. மேற்குத் தொடர்ச்சி மலைப் பகுதிகளிலிருந்து சமவெளிப்பகுதிகளுக்கு செல்லும் வாசலாக திண்டுக்கல் இருப்பதால் இதைக் கைப்பற்ற பல போர்கள் நடந்துள்ளது. இதை மையமாகக் கொண்டு தென் பகுதிகளில் தன் ஆதிக்கத்தை நிலை நாட்டினர் திப்புவும், ஹைதரும் . இந்தப் பகுதியில் அதிகமாக மதமாற்றமும் அரங்கேற்றப்பட்டது. இந்த ஊரை மையப் படுத்தி திப்பு நாணயங்களும் வெளியிட்டான். ஆனால் திண்டுக்கல் என்ற பெயரில் அல்ல ’காலிக்காபாத்’ என்ற பெயரில் அவை வெளியிடப்பட்டது. காலிகாபாத் என்றால் ’“படைத்தவனிடமிருந்து வளம் பெற்ற”’ என்று பொருள்.
இந்த இஸ்லாமிய அடிப்படைவாதிகள் திண்டுக்கல் மாவட்டத்திற்கு காயிதே மில்லத் என்ற இஸ்லாமியப் பிரிவினைவாதத் தலைவர் பெயரை சூட்ட வேண்டியபோது, 1989-ல் தமிழக அரசும் திண்டுக்கல் மாவட்டத்தை காயிதே மில்லத் மாவட்டம் என்று அறிவித்தது. தன்மானமுள்ள இந்துக்களின் போராட்டத்தின் விளைவாக, இந்தப் பெயர் மாற்றப்பட்டது. இப்போது இரண்டு முஸ்லிம் அடிப்படைவாத சட்ட மன்ற உறுப்பினர்களின் முயற்சியால் அடிப்படைவாத விதை ’மணிமண்டபம்’ என்ற பெயரில் திண்டுக்கல்லில் முளைக்கிறது.
கர்நாடக ஸ்ரீரங்கப்பட்டணத்தில் திப்பு பெயரில் மைனாரிட்டி பல்கலைக்கழகம்! ஒரு அலிகார் முஸ்லிம் பல்கலைக்கழகம் தயாரிக்கும் பயங்கரவாதிகளையே சமாளிக்க முடியவில்லை! இதற்கிடையில் மற்றொன்றா? தமிழகத்தில் அதே திப்புவின் பெயரில், திப்புவால் அகற்றப்பட்ட கோயில் அமைந்ததுடன், கணிசமான முஸ்லிம் மக்கள் தொகை கொண்ட ஊரில் மணிமண்டபம்! முஸ்லிம் ஓட்டுக்காக, தேசத் துரோகி விடுதலைப் போராட்ட வீரனாக மாற்றப்பட்டான்! வரலாறு திருத்தி எழுதப்பட்டுள்ளது! தவறான முன் உதாரணங்கள் முன் நிறுத்தப் படுகின்றன! முஸ்லிம் அடிப்படைவாதத்திற்கும் பிரிவினைவாதத்திற்கும் வலுசேர்க்கப்படுகிறது!
நற்றவ வானினும் நனி சிறந்தனவே
பாரதம் காப்போம் ! பாதகர்களை விரட்டுவோம் !
தவசீலர்கள் பூமியில் திராவகத் திப்புவை அனுமதியோம்!





