தவெக – தமிழக சட்டமன்றத் தேர்தல் 2026ல் என்ன செய்யும்?

0

 எனக்குத் தெரிந்தவரை தவெக மிகப்பெரிய ஓட்டுடைப்பியாக வரும். பாதிக்கப்படப் போவது திமுக கூட்டணி பெருமளவில். காரணம்: 

1. திமுகவில் உள்ள <30 ஊப்பிகள், குறிப்பாக முதல்முறை வாக்காளர்கள் விஜய் ஆதரவு மனநிலையில் உள்ளனர். முக்கியக் காரணம் கட்சியில் இன்னும் தாத்தன், அப்பன், மகன், பேரன் என்று போவதால் 200₹க்கு மேல் உயர நினைக்கும் சாதாரணப்பட்டவர்கள் மாற்று ஏற்பாடு தேடுகிறார்கள். விஜய் புதிய ஏற்பாடாக அவர்களுக்குத் தெரிகிறார். கொள்கை எல்லாம் கருணாநிதி காலத்திலேயே நீர்த்துப் போகத் தொடங்கிவிட்டது. பிடிப்பு என்று பணப்புழக்கம் இருந்தது. இம்முறை ஆட்சியில் அதுவும் கட்சிக்காரர்களுக்கு இல்லை. விட்டுப்போவதில் ஆச்சரியமில்லை. 

2. விசிகவில் உள்ள <30 மக்கள் விஜய் கட்சி என்று சொல்வதில் பெருமிதம் கொள்கிறார்கள். இதற்கு உடனடிக் காரணம் திருமாவளவன் திமுகவிடம் செய்துகொண்ட அதீத சமரசம். மற்ற காரணங்கள்: பிற கட்சிகள் விசிகவை வராதே என்று பல இடங்களில் தடுப்பது, விசிகவுக்கு சமுதாயத்தில் இருக்கும் எதிர்மறை பிம்பம். கூட்டணியில் தேமுதிக பெற்ற மரியாதை, விசிகவுக்கு தேமுதிக பொதுவெளியில் செய்யும் அவமரியாதை. விஜய் கட்சி என்றால் இவை எதுவும் இல்லை. 

3. காங்கிரஸ் ஆடும் கெட்ட ஆட்டம். அதிமுகவுக்குப் பிரச்சாரம் செய்யும் ராகுல், இன்னும் தவெக ஏக்கத்தில் திமுகவை ஏசிக்கொண்டிருக்கும் சில காங்கிரஸ் தலைவர்கள்/ தொண்டர்கள். காங்கிரஸை வெங்கம்பயல்கள் என்ற வகையில் வசைபாடும் திமுக தொண்டர்கள். களத்தில் ஒருங்கிணையாத காங்கிரஸ் – திமுக கூட்டணி. 

4. சசிகலா: ஆமாம். அந்த அம்மையாரின் அஇபுதமமுக கூட்டத்துக்கு நம்ம இனத்தானுகள்ல என்று வரும் பல முக்குலத்தோர் ஊப்பிகள். இவர்களால் பெருமளவில் ஓட்டுப்போகுமா என்றால் அளவு சொல்ல ஏலாது. ஆனால் ஓரளவு போக வாய்ப்பு. இவர் அதிமுவுக்கும் ஆபத்துத்தான். 

5. அம்மஞ்சல்லிக்குப் பெறாத ஆனால் திமுகவிடம் வாங்கிக் கொழிக்க வரும் தேமுதிக உள்ளிட்ட லெட்டர்பேட் கட்சிகள். அவர்களுக்குத் தரப்பட்ட அசாத்திய முக்கியத்துவம் மற்ற கட்சிகளின் தொண்டர்கள் மத்தியில் எடுபடாது. வெறுப்பையே தரும். 

இவை போதாதென்று ஆட்சியின் மீதான வெறுப்பு. 

பாஜக மாற்று என்று பார்க்கப்பட்டது போக அதிமுகவுடன் இணைந்துவிட்டதால் பாஜக வேண்டாம் என்று எண்ணும் இளைஞர்கள் சீமானையும் ஏற்காத நிலையில் விஜய் மாற்றாகத் தெரிகிறார். 

இது குறிப்பிடத்தக்க அளவு ஓட்டுகளை மடைமாற்றும். எதிர்நோக்கும் மாற்றம் எப்படி இருக்கும் என்பதற்குச் சொல்லப்படும் பதில்கள் நம்பிக்கை சார்ந்தவை மட்டுமே. தரவுகள் இல்லை. இவர்கள் பெருமளவில் வெல்வதற்கான வாய்ப்பும் குறைவு. பல இடங்களில் பிரிக்கலாம், சிற்சில இடங்களில் மேயலாம். 

மே 4 அன்று பார்க்கலாம்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *