பத்ரு தாக்குதல் (Operation Badr) – என்னதான் இது?
சமீபத்தில் சமூக வலைத்தளங்களில் குறிப்பாக முகநூலில் பத்ரு போர் என்று ஒரு விவரம் இசுலாமியத் தீவிரவாதிகளால் பேசப்படுகிறது. அதுவும் மாநில அரசுக்குச் சவால் விட்டு சமருக்கு அழைக்கும் எதிரிகளின் பேச்சுப் போலவே அறைகூவல்களை (மிக அதிகமான எழுத்துப்பிழைகளுடன்) வெளியிட்டுள்ளனர்.
இது என்னவென்று சற்றே உற்று நோக்கினால் பத்ரு போர் (Battle of Badr) என்பது முகமது நபி மெதினாவில் இருந்து படை திரட்டிக் கொண்டு வந்து மெக்காவைத் தாக்கி வென்றதைக் குறிக்கிறது.
இஸ்ரேலுக்கு எதிரான யாம் கிப்பர் போர் (1973), பாரதத்துக்கு எதிரான கார்கில் போர் (1999), ஆகியவற்றுக்கு Operation Badr என்றே பெயர் வைத்தார்கள்.
இவ்விரு பத்ரு தாக்குதல்களுக்கும் சில ஒற்றுமைகள் உள்ளன. அவற்றில் முக்கியமானது இரண்டுமே எதிரிகள் அசந்திருக்கும் சமயத்தில் எதிர்பாராத விதத்தில் நடத்தப்பட்ட தாக்குதல்கள்.
