அழியும் நிலையில் 13 தலைமுறைக்கு முந்தய சிவன் கோவில் ..!
தேசிய நெடுஞ்சாலை துறையில் நான்கு வழி பாதை திட்டத்தினால், 1300 வருட சிவன் கோவில் அபாயத்தில் உள்ளதாக முகப்புத்தக நண்பர்கள் எழுதியுள்ளார். பகிர்வையும் தினமலர் சுட்டியையும் படித்த போத இதை நடக்க விடக்கூடாது என்ற வைராக்யம் தோன்றுகிறது.
பண்ணமர்ந்தொலி சேர் புறவார் பனங்காட்டூர்ப் பெண்ணமர்ந்தொரு
பாகமாகிய பிஞ்ஞா பிறை சேர்நுதலிடைக் கண் அமர்ந்தவனே கலந்தார்க்கு
அருளாயே.
-திருஞானசம்பந்தர்
நெடுஞ்சாலை துறையினரின், சாலை விரிவாக்கத் திட்டத்தின் படி, கோவிலின் சுற்றுச் சுவர் மற்றும் அதன் உட்புறத்தைப் பாதிக்கும் வண்ணம் குறியீடுகள் இருப்பதாகச் சொல்கிறார்கள்.
இந்த விரிவாக்க திட்டம் நடந்தேறினால், கோவிலில் உள்ள சத்யாம்பிகை தேவி மற்றும் கோவில் பிரகாரங்கள் இடிக்கப்படும் அபாயம் உள்ளதாக அறிகிறோம். இதனை அடுத்து பனையபுரம் மற்றும் சுற்றுப்புறத்தை சேர்ந்த 4000 மக்கள் ஒன்று சேர்ந்து கலெக்டரிடம் மணு கொடுத்துள்ளனர்.
கோவிலின் சிறப்பை குறித்தும், நெடுஞ்சாலை துறையின் திட்டம் குறித்தும் இந்த சுட்டியை படித்து தெரிந்துக் கொள்ளலாம்.
முடிந்தால் விழுப்புரம் மாவட்ட கலெக்டர் அவர்களிடம் இந்த செய்தியையும், நம் கவலையையும் தெரியப்படுத்துங்கள்.
Thiru V Sampath IAS
District Collector Collectorate, Villupuram – 605 602
Phone: 04146-222470 (O)
04146-222480 (R)
Fax: 04146-222470
E-Mail: collrvpm@nic.in
அனைவருக்கும் இதை முடிந்தவரை பகிருங்கள். இச்செய்தி சில தினங்களுக்கு முன் தினமலரிலும் வெளிவந்துள்ளது.
எத்தனையோ பாடுபட்டு கட்டிய நம் கோவில்களை காப்பாற்ற, இந்த சிறு கடமையை (பகிர்தல்) செய்தல் அவசியம் அல்லவா ? இதை பகிரும் அனைவருக்கும் என் சிரம் தாழ்ந்த நன்றிகள்.
