காவியத் தலைவனுக்கோர் காவியம்

0
பாரினில் முதன்மையைப் பாரதம் பெற்றிட
பகலும் அல்லும் பணிபல செய்திட்ட
காவியத் தலைவன் காசறு கோமான்
கண்ணெனத் தேசத்தை கட்டிக் காத்தான்

பேரிடர் இவனென்று பேச்சுக்கள் சூழ்ந்திருக்க
பெருஞ்செயல் பலவாலே பெருமைகள் மீட்டனன்
நம்பிய ஜெயவாக்கினி நமக்கில்லை என்றபோது
நாற்காலி காத்திட நாணமின்றிக் கெஞ்சவில்லை

காவியே ஆகாதென்று காதங்கள் ஓடியோர்
கால்கடுக்க வரிசையில் காத்திருந்து அதரிக்க
நாழிகை தாண்டாதென்று நாப்பிளக்கப் பேசியோர்
நாணத்தில் வாய்மூட நாட்டை வளர்த்தானே

ஆறாண்டு காலங்கள் ஆக்கத்தின் பொற்காலம்
ஆசற நலங்காத்து ஆக்கங்கள் பலசெய்து
ஆரிருள் உய்த்தநாட்டை ஆரியங் கொளச்செய்து
ஆழிசூழ் உலகில்நாடு ஆக்கத்தில் நிமிரச்செய்தான்

விளம்பரங்கள் பிடிக்காது வீண்செலவு என்றதனால்
விண்முட்டும் சாதனைகள் வீணென்று வைரிகள்
விழிபிதுங்கப் பொய்யுரைத்து வீணர்கள் கைகோர்த்து
விசுவத்தின் உத்தமனை வீழ்திவிட்டுக் கொக்கரித்தார்

 

சேவகர்கள் வீழ்வதில்லை செய்தபணி சாவதில்லை
சேவையது கடமையாம் செருக்கெதுவும் தேவையில்லை
சேவையாற்ற நரேந்திரன் செம்மையாய் மிளிர்ந்திடவெ
சேதுநாதன் பாதம்நோக்கி செம்மைத்தவம் புரிகின்றான்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *