வன்காதல் திருமணங்களால் சாதி ஒழியுமா?
சாதி ஒழிப்பு என்பது குறித்து பல்வேறு கருத்துக்கள் நிலவி வருகின்றன. மதசார்பற்ற நம் அரசு சாதிகளை ஒழிக்கவே எங்கெங்கு நோக்கிலும் சாதிகளைக் கேட்பதாகச் சொல்கிறது. காலகாலத்துக்கும் சாதியைக் கேட்டுக்கொண்டே இருந்தால் அது இருந்துகொண்டே தானே இருக்கும்? அப்புறம் எப்படி ஒழிப்பதாம்? சரி… அரசு தான் அறிவிலிகளின் கையில் சிக்கிச் சீரழிந்து போனது. சமூகநலத்தில் அக்கறை கொண்ட கல்வியாளர்கள் சிந்தனையாளர்கள் சரியான திசையில் மக்களை வழிநடத்தலாமே?
ஆகா! செய்யலாமே!! சமூக சிந்தனையாளர்களின் சற்றே வித்தியாசமாக தேசியப் பிடிப்புக் கொண்டவர்கள் இருக்கிறார்கள். இவர்கள் பெரும்பாலும் அதிகாரத்தில் உள்ளோர்க்கு அஞ்சாமல் உருப்படியான கருத்துக்களைச் சொல்கிறார்கள். வழக்கம் போல திராவிட திராபைவாதம் அக்கருத்துக்களைத் தம் பலமான ஊடகக் கரம் கொண்டு புறந்தள்ளும் செயலும் நடந்துவருகிறது. ஆனால் சமூகச் சிந்தனையாளர்களும் சறுக்குமிடம் ஒன்று உள்ளது. கற்றோர் பலரும் தடுமாறும் தருணங்களே அவை.

தெளிந்த சிந்தனை இல்லாது உணார்ச்சி வசப்பட்டு முடிவுகள் எடுப்பது ஒருவகை. பிறர் உணர்சியைத் தூண்டி அதில் குளிர்காய்ந்து தான் பெரிய மனிதன் என்று பேரெடுக்க விழைவது மற்றோர் வகை. நம் நாட்டில் பெரிய தலைவர்கள் சிந்தனையாளர்கள் என்றறியப்படும் பலரும் இரண்டாவது வகையைச் சார்ந்தோரகவே இருக்கிறார்கள். சற்றே விரிவாகப் பார்போம்.
தற்போது இணையத்தில் முகநூலில் ஒரு சாதி ஒழிப்பு விவாதம் நடக்கிறது. சாதி ஒழிப்பு
குறித்து அதில் சொல்லப்பட்ட கருத்துக்கள் நடைமுறைக்கு ஒவ்வாத ஜல்லிகள். அந்த
ஜல்லி ரோடு போடக்கூட லாயக்கில்லை.
தலித்
இளைஞர்கள் திட்டமிட்டுப் பிற (மேல்/ஆதிக்க) சாதிப் பெண்களைத் திருமணம்
செய்யவேண்டும் என்றும் இதுவரை அப்படிச் செய்யாதவர்கள் உடனே
செய்யுங்கள் என்றும் ஒரு மேதாவி கருத்துப் பேசியிருக்கிறார்.
இதுகுறித்த ஏரணம் சார் கேள்விகள் பலவற்றுக்கும் சாதி ஒழிப்பு
வாதம் செய்யும் இந்தப் புத்திஜீவிக்குப் பதிலளிக்க இயவில்லை. கேட்கப்பட்ட சில கேள்விகள் இதோ:
- ஒரு
இதயம் சாதி பார்த்து இந்த சாதி ஒரு காலத்தில் என் சாதியை ஆதிக்கம்
செலுத்தியது, ஆகவே இச்சாதிப் பெண்ணை நான் மணமுடிப்பேன் என்ற முன்முடிபுடன்
களமிறங்குவதைக் காதல் என்று எப்படி ஏற்பது? - ஏன் தலித் ஆண்கள் உயர்/ஆதிக்க சாதிப் பெண்களை வன்காதல் செய்து மணப்பதை மட்டும் ஊக்குவிக்கிறீர்கள்? தலித் பெண்கள் பிற சாதி ஆண்களை மணமுடிப்பது குறித்து ஏன் சிந்திப்பதே இல்லை?
- ஏன் உயர்/ஆதிக்க சாதி ஆண்கள் தலித் பெண்களை மணமுடிப்பதைப் பற்றிப் பேசவில்லை. அப்படிச் செய்தால் சாதி ஒழியாதா?
- தலித்களைக் கொண்டுவர வேண்டிய மேல்நிலை என்பது என்ன? அந்நிலை என்னென்ன விவரங்கள் கொண்டு நிர்ணயிக்கப்பட்டது?
- இத்தனை ஆண்டுகளாக சாதி மறுப்பு/சாதிக்கலப்புத் திருமணங்கள் நடந்தனவே! ஏன் சாதி ஒழியவில்லை? இந்த வகை வன்காதல் திருமணங்களால் சாதி ஒழியும் என்று என்ன உறுதி?
இது பெண்களைத் தூக்கி வந்து உன் திமிரை அடக்குகிறேன் என்ற ஆணாதிக்க மனோபாவம். உனக்குச் ஒருவனுடன் பிணக்கு என்றால் அவன் வீட்டுப் பெண்களைத் தூக்கிவா என்பது முன்காலப் போர் வழக்கம். அதைப் படித்தோர் என்று பாரிலறியப்படும் பலரும் ஆணாதிக்கம் என்று கண்டித்திருக்கிறார்கள்.
ருக்மணியைக் கிருஷ்ணன் கரம் பிடித்தானே. ருக்மணி ராஜகுமாரி, கிருஷ்ணன் மாட்டிடையன்… அவன் செய்யலாம் அதைப் பிறருக்கு உபதேசிக்கக்கூடாதா என்று கேட்டார் அந்த மேதாவி.
ராஜகுமாரி
மாட்டிடையனைக் காதலித்தாள், அவனும் ராஜகுமாரியைக் காதலித்தான். அவளது
அண்ணன் இந்த இருமனமொப்பிய இக்காதலைப் பிரித்து அவளை வேறொருவனுக்கு மணமுடிக்க
எண்ணினான். காதலனாகிய மாட்டிடையன் தன் காதலியாகிய ராஜகுமாரியை கரம்பற்றிக்
கொண்டுபோனான். இதுவே பாகவதத்தில் வரும் கிருஷ்ண – ருக்மணி வரலாறு.
மாட்டிடையன்
திட்டமிட்டு சாதியை ஒழிக்கிறேன் பேர்வழி என்று காதல் வலை வீசி
ராஜம்குமாரியைத் தூக்கிக் கொண்டு போகவில்லை. சிசுபாலன் அப்படித்தான்
திட்டினான் என்று சொல்லித் தோற்றவனின் பொறுமலை வரலாறாகத் திரிக்கும் வேலை இது. தான் சொன்னது சரிதான் என்று வரலாற்றைத் திரித்துக் கூறியாவது நிரூபிக்க விழையும் ஈவெரா முத்திரை பெற்ற மூர்க்கத்தனம் தவிர வேறெதுவும் காணக் கிடைக்கவில்லை.
சரி.. இருக்கட்டும்….. அதென்ன வன்காதல். கொடுமையில் கொடியது வன்கொடுமை. அதே போல காதலில் கொடியது வன்காதல். அதென்ன கொடிய காதல். திட்டமிட்டு ஒரு பெண்ணைக் காதல் வலையில் வீழ்த்துவது. அதுவும் சாதி அடிப்படையில் பழிவாங்கும் நடவடிக்கை போல காதலைச் செய்வது கற்றவன் செய்யும் காரியங்களில் அடங்காது. ஆனால் புத்திஜீவிகள் என்று உலாவரும் சிலர் இதை அறிவுறுத்துகிறார்கள். காலக் கொடுமை!?
மட்டும் அலசப்படுகிறதாம். முதலில் அறிவுறுத்திய வன்காதல் குறித்து என்ன முடிவு? அது
அவ்வளவுதான்… ஓசையின்றிப் பின் வாங்கிவிட்டார் போலும்.
கூவிப் பிதற்றலன்றி
நாட்டத்திற் கொள்ளாரடீ – கிளியே
நாளில் மறப்பாரடீ.
தன் தகுதியை உயர்த்திக் கொண்டு சமூகத்தில் தனக்கான மரியாதையைப் பெறுவதே காலங்களைக் கடந்து நிலைத்திருக்கும் நற்பெயரைத் தரும். தகுதி உயர மரியாதை உயரும். பொம்பளை பொறுக்கினால் சாதி ஒழிந்து நீயும் மரியாதை பெறலாம் எனச்
சொல்லும் முட்டாள்தனத்தை நம்பி பெண்கள் பின்னால்
அலைந்தால் எந்தச் சமூகமும் உருப்பட வாய்ப்பே இல்லை.