காலையில் நீராடி பாப்பா – நீ 

புத்தாடை உடுத்திக்கொள் பாப்பா

கடவுளைக் கும்பிட்ட பின்னிங்கே

கொண்டாட்டம் களைகட்டும் பாப்பா

இனிப்புகள் பகிர்ந்துண்டு பாப்பா – நீ

இனிமையாய் மகிழ்ந்திடு பாப்பா

தீமையது தோற்றதைப் பாப்பா – நாம்

தீபாவளி கொண்டாடுவோம் பாப்பா

நண்பர்கள் உறவினர்க்கு பாப்பா – நீ 

நல்வாழ்த்துச் சொல்லிவிடு பாப்பா

பட்டாசுகள் வெடித்தே பாப்பா – நீயும்

பத்திரமாய்க் கொண்டாடு பாப்பா

பறவைகள் பயப்படாது பாப்பா – இந்தப் 

பூமியில் பட்டாசு வெடித்தால்

விலங்குகட்கும் வேதனை இல்லை –  நீ

வெடிகளைப் பத்திரமாய் வெடித்தால்

ஒருநாள் கொண்டாட்டம் பாப்பா – யார்க்கும்

பெருந்துன்பம் இருப்பதில்லை பாப்பா

அடிப்படை புரிந்தே பாப்பா – நீயும்

அகமகிழ்ந்து கொண்டாடு பாப்பா

– பார்வதேயன்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *